மத்திய அரசு அநியாய பெட்ரோல் விலை உயர்வை முழுவதும் திரும்பபெற வேண்டும், என்னை நிறுவனங்கள் கைகளில் இருக்கும் விலை நிர்ணயிக்கும் உரிமையை உடனடியாக திரும்பப் பெற்று மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், மாநில அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை குறைத்து விளைவுயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (13.9.2013) சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு SDPI கட்சியின் தொழிற்சங்கமான சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன்(SDTU) சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDTU மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் பால் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் மஸ்தான் வரவேற்புரை நிகழ்த்தினார். SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, SDTU மாநில துணை தலைவர் சம்சுதீன், மாநில துணை செயலாளர் அன்சாரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.SDTU மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூட்டோ சாகுல்,வட சென்னை மாவட்ட செயலாளர் கரிமுல்லாஹ் ஷெரிப்,மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காதர்,தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் முஹைதீன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட சென்னை மாவட்ட தலைவர் கராத்தே யூசுப் நன்றியுரையாற்றினார்.மேலும் SDTU நிர்வாகிகள், SDTU உறுப்பினார்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment