முஸாஃபர் நகர் : ‘நான் எதனையும் கூற விரும்பவில்லை. எப்பொழுது திரும்பிச் செல்வோம் என்பது மட்டுமே தெரியவேண்டும்.’ என சகோதரனை வன்முறையாளர்கள் வெட்டி வீழ்த்திய பிறகு 3 துண்டாக வெட்டி எறிந்த காட்சியை நேரடியாக கண்ட முஹம்மது பூர் கிராமத்தைச் சார்ந்த பூனம் ஜஹாம் கூறுகிறார்.
கடந்த ஐந்தாம் தேதி பூனம் ஜஹாம் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வேளையில் கடந்த 7-ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஜாட் இனத்தைச் சார்ந்த வன்முறையாளர்கள் வீட்டை தாக்கினர். துப்பாக்கியால் சுட்ட கொடூரர்கள் குழந்தைகளை கூட சும்மா விடாதீர்கள் என்று முழக்கமிட்டனர்.
வீட்டில் திடுதிப்பென்று நுழைந்த மிருக வெறியர்கள் பூனம் ஜஹாமின் சகோதரர் ரஃபீக்கை வெட்டி வீழ்த்தினர். தொடர்ந்து கோடாரியை பயன்படுத்தி அவரது உடலை 3 ஆக துண்டாக்கினர். வீட்டில் இருந்து குழந்தைகள் உள்ளிட்டவர்கள் தப்பிச் சென்றதால் பூனமும், அவரது கணவரும், குழந்தைகளும் உயிர் தப்பியுள்ளனர்.
யுனானி மருத்துவரான பூனம் ஜஹாமின் கணவர் டாக்டர் தில்ஷாதின் இரண்டு மருந்து கடைகளும் தீக்கிரையாகின. வீட்டில் இருந்த வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ஏழு பவுன் தங்க நகையும் திருடப்பட்டுள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment