ஆற்றங்கரை முதல் கோப்பேரிமடம் வரையிலான சாலையை சீரமைக்க கோரி SDPI கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையில் உள்ள சாலையானது அப்பகுதியில் அமைந்து இருக்கும் 15க்கும் மேற்பட்ட ஊர்களை மாவட்ட தலை நகரமான இராமநாதபுரத்துடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையை பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், வியாபரிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழித்தடத்தில் 8 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும், 3 தனியார் பேருந்துகளும் தினசரி இயக்கபடுகின்றன.
இச்சாலை தற்சமயம் மிகவும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் ஒரு வாகனம் வரும்போது, மற்றொரு வாகனம் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் குறுகலாகவும் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துடனே தினசரி பயனங்களை மேற்கொள்கின்றனர். கடந்த தேர்தலின் போது அவசரத்தில் சீரமைக்கப்பட்ட சாலையும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றபடாமலேயே உள்ளது.
எனவே இச்சாலையை சீரமைக்க கோரி திருவாடனை தொகுதி எஸ்.டி.பி.ஐ சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவாடனை தொகுதி தலைவர் சஹர்தீன் தலைமையில் சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரில் செயலாளர் ரியாஸ் அஹமது மனுவை நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் அளித்தார். மனுவை பெற்று கொண்ட நெடுஞ்சாலை துறை அதிகாரி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இணை செயலாளர் கஜினி, அழகன்குளம் நகர் தலைவர் அப்துல் ஜமீல், சித்தார்கோட்டை உமர் உள்ளிட்ட கிளை நிர்வாகிகளும் மனு அளிக்கும் போது உடன் இருந்தனர்.
Puduvalasai News Exclusive
0 கருத்துரைகள்:
Post a Comment