Wednesday, September 18, 2013

ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியதால் புதுவலசையில் பரபரப்பு

புதுவலசையில் நேற்று மாலை சுமார் 7:30மணியளவில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இயந்திர கோளாறால் திடீரென்று தரை இறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 உச்சிப்புளி கடற்படை விமான தளத்திலிருந்து இரவு நேர ரோந்துகாக 2 விமானிகளுடன் புறப்பட்ட இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திர கோளாறு காரணமாக புதுவலசையில் தரை இறக்கப்பட்டது.. அதில் பயணம் செய்த 2 விமானிகளும் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.  


பின் அவர்கள் கார் மூலம் உச்சிப்புளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த தேவிபட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பழுதை சரிசெய்ய சென்னையில் இருந்து நிபுணர்கள் வர வேண்டி இருப்பதால் வயல்வெளியில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டருக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.



தகவல் : சகோ. ரிஸ்வான்

Puduvalasai News exclusive


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza