Tuesday, September 17, 2013

அமெரிக்க கடற்படை தலைமையக துப்பாக்கி சூடு: கொலையாளி அடையாளம் தெரிந்தது!

திங்கட்கிழமை காலை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையக யார்டில் மர்ம நபர் ஒருவரால் நடத்தப்பட்ட பரபரப்பு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், துப்பாக்கியால் சுட்ட நபர் உட்பட. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக கருதப்படும் மற்றொரு நபர் இன்னமும் சிக்கவில்லை.
அவர், அந்த பில்டிங்கில் இன்னமும் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், 34 வயதான ஆரென் அலெக்சிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (மேலே போட்டோ பார்க்கவும்)
இவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
நியூயார்க்கை சேர்ந்த ஆரென் அலெக்சிஸ், அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்தவர். அதனால்தான் அவரால் துப்பாக்கியுடன் இந்த பில்டிங்குக்கு உள்ளே செல்ல முடிந்திருக்கிறது. எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது சரியாக தெரியவில்லை.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அலெக்சிஸூக்கு உதவிய நபராக இருக்கலாம் என அந்த பில்டிங்கில் இருந்த மற்றொருவர் பிடிக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டார் என தெரியவருகிறது. விசாரணையின்போது, அவருக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கும் தொடர்பு கிடையாது என்பது தெரிய வந்ததில், அவர் விடுவிக்கப்பட்டார் என்பது தற்போதைய தகவல்.
அதேநேரத்தில் கொல்லப்பட்ட அலெக்சிஸைத் தவிர வேறு ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த சம்பவத்தில் தொடர்பு பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர், இன்னமும் அந்த பில்டிங்கில் இருக்கலாம் என தேடுதலில் இறங்கியுள்ளார்கள் பாதுகாப்பு படையினர்.
பில்டிங்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டவர்களில் சிலர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இருவர் எனவும், இருவரும் சீருடை அணிந்திருந்தார்கள் என்றும் கூறியதாக ஏ.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவரும் தமது கைகளில் AR-15 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பில்டிங், அமெரிக்க கடற்படை தலைமையக யார்ட் என மீடியாக்களில் பொதுப்படையாக குறிப்பிடப்படுகிறது. அது உண்மையில், NAVSEA (Naval Sea Systems Command Headquarters) என அழைக்கப்படும், அமெரிக்க கடற்படையின் உத்தரவிடும் தலைமையகம்.



Info : Viruviruppu.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza