புது டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992, டிசம்பர் 6ஆம் தியதி பாஜக உட்பட சங்பரிவார் தலைவர்களின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
இது தொடர்பான சதி வழக்கு, அத்வானி உட்பட 20 சங்பர்வார் தலைவர்கள் மீது போடப்பட்டு, ரேபரேலி தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், அத்வானி உட்பட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை அலகபாத உயர்நீதி மன்றம் விசாரித்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தி 2010 மே 21ஆம் தியதி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரணைக்கு அனுமதித்த உச்சநீதிமன்றம் வரும் டிசம்பர் மாதம் விசாரணைத் தொடங்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால், முன்னரே இவ்விசாரணையை தொடங்க வேண்டும் என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்தது.
இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ-ன் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை முன்னரே நடத்த அனுமதி அளித்து, விசாரணை டிசம்பர் மாதத்திற்கு பதிலாக அடுத்த அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே விசாரணை தொடங்கும் என்று தீர்ப்பளித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment