Wednesday, September 4, 2013

சிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்

ராமநாதபுரத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை யில் சேர விண்ணப்பங் கள் வினியோகிக்கப்பட் டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியை மேம்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என்று முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறி வித்திருந்தார்.
. இந்த பணிக்கான ஆட்கள் தேர்வு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட்து.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நேற்று காலை முதல் வினியோகிக்கப்பட்டன.
இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

 முதல்-அமைச்ச ரின் அறிவிப்புப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 360 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அவரவர் தகு திக்கேற்ப இந்த படையில் சேர்ந்து கொள்ளலாம். இவர் களுக்கு மாதம் ரூ.ஆயி ரத்து 500மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இதற்கான உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு நவம்பர்
10-ந் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பத்தை அக்டோபர் 1-  ந்தேதிக்குள் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் தேர்வு என குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற் கான விண்ணப்பங்களை இணைய தளத்திலும் பதிவி றக்கம் செய்து கொள்ளலாம்.
  

இவ்வாறு அவர் கூறினார்.  

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய....

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza