பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M.ஷெரிப் அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 16 அன்று, உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடங்களை விட்டு பிற கிராமங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தனர்.
இக்குழுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் O.M.A.சலாம், தேசிய செயற்குழு உறுப்பினர் E.M.அப்துர் ரஹ்மான், முஹம்மது ரோஷன், மேற்கு உத்திர பிரதேச தலைவர் மௌலான சதாப், SDPI கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் E.அபூபக்கர், தேசிய செயற்குழு உறுப்பினர் ஃபைஜி, நெளஸாத் புனக்கள் மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் தேசிய துணை தலைவர் மௌலானா இஃப்திகாருல்லாஹ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மத உணர்வுகளால் தூண்டப்பட்ட கும்பலால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், நடந்த நிகழ்வுகள், பாதிக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட பல்வேறு கிராம மக்கள் தங்கள் துயரங்களை பார்வையிட வந்த தலைவர்களிடம் பதிவு செய்தனர். மத உணர்வுகளால் தூண்டப்பட்ட கும்பல்கள் வெளியில் இருந்து வந்த கும்பல்களின் தலைவர்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட்டதாக தெரிவித்தனர். இந்த பிரதிநிதிகள் குழு நிவாரண முகாம்கள் மற்றும் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த உள்ளூர் சமூக தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு 48 பேர் மட்டுமே இதுவரை உயிரிழந்ததாக அரசு கூறினாலும் உண்மையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். கலவரத்தில் காணாமல் போன நபர்களையும் உட்படுத்தினால் எண்ணிக்கை 400 ஆக உயரக்கூடும். மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல் உண்மைக்கு மாற்றமாக குறைவாக உள்ளது. மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நிவாரண முகாம்கள் மற்றும் பிற இருப்பிடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதே போன்று 60 க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர் . இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூர் முஹல்லாவாசிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மதரஸா நிர்வாகத்தினர் செய்தார்களே தவிர அரசு உடனடியாக எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இந்த பிரதிநிதிகள் குழு பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு அடைக்கலம் கொடுத்த உள்ளூர் குடும்பங்களை பாராட்டியது. நங்லா கிராமத்தின் பஞ்சாயத்து அரங்கில் ஒன்று கூடிய 600 நபர்களுக்கு மத்தியில் E.அபூபக்கர் கூறுகையில், இந்த உயர்ந்த செயலால் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். மதீனத்து அன்சாரிகள் எவ்வாறு முஹாஜிரின்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற பொழுது அடைக்கலம் தந்து ஏற்று கொண்டார்களோ அதே போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்த உங்களின் உன்னதமான செயல்கள் வெளிப்படுத்துகிறது.
கலவரத்தால் அதிகப்படியாக பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய நிவாரண முகாம் உள்ள ஜோர்லா கிராமத்தையும், அந்த நிவாரண முகாம்களின் ஒருங்கிணைப்பாளர்களையும் பிரதிநிதிகள் குழு சந்தித்தது. ஏறத்தாழ 15,000 மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்த நிவாரண முகாம்களில் வந்தடைதுள்ளனர். இந்த நிவாரண முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை உள்ளூர் முஸ்லிம் குடும்பங்கள், இளைஞர்கள், உள்ளூர் தலைவர்கள் செய்து வருகின்றனர்.
உள்ளூர் தலைவர்களால் ஒன்று கூட்டப்பட்ட நிவாரண முகாமில் உரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M.ஷெரிப் அவர்கள் கூறுகையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வ தொண்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை கண்டறியும் கணக்கெடுப்பை துவங்கியுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தேவையான நிவாரண பணிகள் உடனடியாக துவங்கப்படும் என்றார். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அச்சத்தோடும், பயமும் சூழப்பட்டத்தின் காரணத்தால் தங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல பாதிக்கப்பட்ட மக்கள் அச்சப்படுகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் வீடுகளை விட்டு குற்றவாளிக் குழுக்களை அகற்றி தேவையான பாதுகாப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து தருவது அரசின் கடமையாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் O.M.A சலாம் அவர்கள் கூறுகையில், வழக்கறிஞர்களை கொண்ட குழு அமைத்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மத்திய குழு கூட்டம் அன்று மாலையே டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிவாரணக்குழு மற்றும் தன்னார்வ தொண்டர்களை கலவரம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி முழு நிவாரணப்பணிகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M.ஷெரிப் அவர்கள் உரையாற்றிய போது
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
Info : Popularfronttn.org
0 கருத்துரைகள்:
Post a Comment