Saturday, September 21, 2013

வி.ஹெச்.பியின் மாநாட்டில் இருந்து உலக மத பாராளுமன்ற கவுன்சில் விலகல்!


வாஷிங்டன்: அமெரிக்காவின் ஷிகாகோவில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடுச் செய்திருந்த நிகழ்ச்சியில் இணை ஏற்பாட்டாளராக செயல்பட்ட உலக மத பாராளுமன்ற கவுன்சில் (சி.பி.டபிள்யூ.ஆர்) விலகியுள்ளது.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்ததின விழாவையொட்டி வி.ஹெச்.பியின் அமெரிக்க பிரிவு நடத்தும் நிகழ்ச்சியில் சி.பி.டபிள்யூ.ஆர் இணை ஏற்பாட்டாளராக இருந்து வந்தது. இந்நிலையில் அவ்வமைப்பு இப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளது.
 
பாபா ராம்தேவ் முக்கிய விருந்தினராக கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு ஹிந்துத்துவா அமைப்புகளும் பங்கேற்கின்றன.
 
1893-ஆம் ஆண்டு விவேகானந்தரை சர்வ மத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற சிகாகோவிற்கு அழைத்தது சி.பி.டபிள்யூ.ஆர் அமைப்பாகும்.
 
வி.ஹெச்.பியின் நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘நாங்கள் இப்போது விவேகானந்தரின் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மத சகோதரத்துவ கொள்கைகளை மதிக்கிறோம். ஆனால், வகுப்புவாத அரசியலுக்கு ஊக்கமளிக்கும் வி.ஹெச்.பியின் கொள்கைகளை அங்கீகரிக்கவில்லை. ஆகையால் இந்நிகழ்ச்சியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுகிறோம் என்று தெரிவித்துள்ளது.
 
சி.பி.டபிள்பூ அமைப்பின் முடிவை இனப்படுகொலை எதிர்ப்பு மாநாடு அமைப்பு (சி.ஏ.ஜி) வரவேற்றுள்ளது.
 
சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் துஷ்பிரயோகம் செய்வதாக அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகளின் வன்முறை அரசியலில் இங்குள்ள சில அமைப்புகளின் பங்கினை அடையாளம் காணாததன் மூலமே இத்தகைய அமைப்புகள் எதிர்க்கப்படாமல் உள்ளன என்று சி.ஏ.ஜியின் இன்னொரு செய்தி தொடர்பாளரான டாக்டர் ராஜஸ்வாமி கூறுகிறார்.

Info : popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza