- ஆகஸ்ட் 27, 2013 முதல் உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்திற்கெதிராக மிகப் பெரிய அளவில் கலவரம்.
- 50 க்கும் குறைவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆனால் உண்மை எண்ணிக்கை இதை விட 4 மடங்கு அதிகம்.
- நூற்றுக்கணக்கான மக்கள் காயம் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம் அல்லது சேதம்.
- கலவரத்தால் பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட கிரமாங்களிலிருந்து மக்கள் தப்பியோட்டம்.
- 70000 க்கும் அதிகமான அகதிகள் பல்வேறு நிவாரண முகாம்கள் மற்றும் சக முஸ்லிம்களின் வீடுகளில் தஞ்சம்.
- செப்டம்பர் 16, 2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தலைமையிலான குழு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்தது.
- கலவரத்தில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் தேவை.
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் அடங்கிய குழு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நம்முடைய ஆதரவை நாடி முஸாஃபர்நகர் !
உணவு, உடைகள், மருந்துகள் மற்றும் சட்ட உதவி !!
இந்த புனித பணியில் நீங்களும் பங்கு பெற அழைக்கிறோம்.
உணவு, உடைகள், மருந்துகள் மற்றும் சட்ட உதவி !!
இந்த புனித பணியில் நீங்களும் பங்கு பெற அழைக்கிறோம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
184/229, 2 வது மாடி , லிங்கிச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001
தொலைபேசி : 044 - 6461 1961. இணையதளம் : www.popularfronttn.org
184/229, 2 வது மாடி , லிங்கிச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001
தொலைபேசி : 044 - 6461 1961. இணையதளம் : www.popularfronttn.org
முஸாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்! பாப்புலர் ஃப்ரண்ட் ஜும்ஆ சர்குலர்
கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் அவர்கள் தலைமையிலான குழு செப்டம்பர் 16 அன்று நேரில் சென்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட நம் சமுதாய சொந்தங்களுக்கு தேவையான நிவாரணங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உத்திரப்பிரதேசத்தில் செய்து வருகின்றது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் உள்ள முஸ்லிம்களின் நிவாரணத்திற்கு வேண்டி பாப்புலர் ஃப்ரண்டின் சார்பாக வெள்ளிக்கிழமை ஜூம்ஆவில் நிதி வசூல் செய்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரக்கூடிய ஜூம்ஆ (20.09.2013) அன்று பாதிக்கப்பட்ட நம் சகோதர முஸ்லிம்களுக்கு உதவி செய்ய பள்ளியில் அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
ஏ.ஹாலித் முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இப்படிக்கு
ஏ.ஹாலித் முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
0 கருத்துரைகள்:
Post a Comment