Tuesday, September 17, 2013

துருக்கி போர் விமானம் வானில் வைத்து சுட்டு வீழ்த்திய சிரியா நாட்டு ஹெலிகாப்டர்!

“சிரியா நாட்டு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக, யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமோ, அவர்களுக்கு தெரிவிப்போம்” என்று கூறியுள்ள துருக்கி, “நேட்டோ மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு விளக்கம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.


ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக துருக்கி துணை பிரதமர் கருத்து தெரிவித்தபோது, தமது விமானப்படை, சிரியா விமானப்படையின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொண்டார். சிரியாவில் ஹெலிகாப்டர் தமது நாட்டு எல்லைக்குள் வந்த காரணத்தாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

சிரியா விமானப்படைக்கு சொந்தமான M-17 ரக ஹெலிகாப்டர், சிரியாவில் எல்லைப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, அப்படியே துருக்கி வான் பகுதிக்கு உள்ளே சென்றது என்பது மீடியா செய்தி. ஹெலிகாப்டர் விமானிக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும், ஆனால், விமானி தொடர்ந்தும் துருக்கி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

அதன்பின், இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துருக்கியின் மலாத்யா விமானப்படை முகாமில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானப்படையின் போர் விமானம், வானில் வைத்து ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது.

Info : viruviruppu.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza