துபாய் உலக மையத்தில் (DWC – Dubai World Central) அமைக்கப்பட்டு வரும், புதிய ஏர்போர்ட் சரியாக இயங்குகிறதா என பரிசோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு ஏராளமான பொதுமக்கள் ரெஸ்பான்ஸ் செய்யப்பட்டதை அடுத்து, புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் புதிய ஏர்போர்ட்டாக, அல் மக்தோம் விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் இந்த விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படவுள்ளன. அதையடுத்து, விமான நிலையத்தின் சோதனை நடவடிக்கை (test drive) செய்யப்படுவதற்காக 1000 பொதுமக்களை வரவேற்று விளம்பரம் செய்யப்பட்டது.
இம்மாதம் 30-ம் தேதிவரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்பதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம்.
அவர்களே எதிர்பாராத அளவில் விண்ணப்பங்கள் வந்து குவிந்ததில், விளம்பரம் வெளியிடப்பட்டு 48 மணி நேரத்துக்கு உள்ளேயே 1000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து மேலதிக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 பொதுமக்கள் கலந்துகொள்ளும் டெஸ்ட் டிரைவ், அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்ட விளம்பரத்தில், விண்ணப்பிக்கும் பொதுமக்கள் அன்றைய தினம் முழுவதும், விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Info : Viruviruppu.com
0 கருத்துரைகள்:
Post a Comment