Tuesday, September 24, 2013

விசாரணைக் கைதிகளான முஸ்லிம்களில் பெரும்பாலோர் நிரபராதிகள்!: தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்


mm

புதுடெல்லி: இந்தியாவில் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படுகின்றனர் என்று தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2012-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி மொத்த விசாரணைக் கைதிகளில் முஸ்லிம் விசாரணைக் கைதிகள் 21 சதவீதம் ஆவர்.  17.75 சதவீதம் பேரை மட்டுமே  நீதிமன்றங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளன.
விசாரணைக் கைதிகளில் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 69.92 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் இதைவிட அதிகம்.

2012-ஆம் ஆண்டு விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டவர்களில் 71.36 சதவீதம் பேரும் ஹிந்துக்கள் ஆவர். 3.97 சதவீதம் சீக்கியர்கள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். 4.95 சதவீதம் சீக்கியர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 3.5 சதவீதம் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சார்ந்த விசாரணைக் கைதிகளில் தண்டிக்கப்பட்டவர்கள் நான்கு சதவீதம் ஆகும்.
2011-ஆம் ஆண்டில் இதர சமுதாயங்களைச் சார்ந்த விசாரணைக் கைதிகளில் பெரும்பாலோர் தண்டிக்கப்பட்டபோது முஸ்லிம் விசாரணைக் கைதிகள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் பெரும்பாலான முஸ்லிம்களை நீதிமன்றங்கள் நிரபராதிகள் என்று கண்டறிந்து விடுதலை செய்கிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் தீவிரவாத வழக்குகளை சுமத்தி முஸ்லிம்களை பல ஆண்டுகள் விசாரணை கைதிகளாக சிறையில் அடைப்பதும் பின்னர் நீதிமன்றங்கள் அவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவிப்பதும் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் புதிய புள்ளிவிபரங்கள் முஸ்லிம்கள் தேடிப் பிடித்து கைதுச் செய்யப்படுகின்றார்கள் என்பதற்கான ஆதாரமாகும். போலீஸில் வகுப்புவாத சக்திகளின் முஸ்லிம் விரோதப் போக்கே, நிரபராதிகளான முஸ்லிம்கள் அதிகமாக கைது செய்யப்படுவதற்கு காரணம் என்று குற்றவியல் வழக்குரைஞரான மஜீத் மேமன் கூறுகிறார்.

Info: thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza