கடந்த 15 ம் தேதி அதிகாலை திருவள்ளூர் மாவட்டம் சோழாவரம் அம்பேத்கார் நகரை சேர்ந்த மாரிமுத்து இவரது 10 வயது மகள் 4 ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது காமுகர்களால் தூக்கி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
படுகாயமடைந்த நிலையில் ஒரு தோப்பில் மயக்க நிலையில் கிடந்த மாணவி எழும்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லியில் ஒரு மாணவிக்கு இதே கொடூரம் நடைபெற்ற போது நாடே கொந்தளித்தது. ஆனால் இந்த தலித் சிறுமிக்கு நடைபெற்ற கொடூரத்திற்கு முறையாக வழக்கு பதிவு செய்யவோ, உரிய சிகிச்சை அழிக்கவோ இல்லை மாறாக சிறுமியின் குடும்பத்தினர் காவலர்களால் மிரட்டப்பட்டனர்.
சம்பவத்தை கேள்விப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் கடந்த 16 ஆம் தேதி மாணவியையும், மாணவியின் பெற்றோரையும் சந்தித்து விபரம் கேட்டறிந்ததோடு காவல்துறை அதிகாரிகளிடமும் பேசினர். இதன் பிறகு காவல்துறை வேகமாக செயல்பட துவங்கியது.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளர் நபீஸா பேகம் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய அச்சிறுமியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்
அச்சிறுமிக்கும் அவரின் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.
வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றவேண்டும்.
குடும்பத்திற்கு தற்காலிக நிவாரணம் வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்த தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்ய நாராயணன் ஆகியோர் இந்த வழக்கை பிர்ப்பகல் 2;30 மணிக்க்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
ஒரு தலித் சிறுமிக்காக பர்தா அணிந்த 15க்கும் மேற்ப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெண்கள் அணியினர் உயர் நீதிமன்றத்தில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Info : Sdpitamilnadu.org
0 கருத்துரைகள்:
Post a Comment