Saturday, September 14, 2013

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? நெல்லையில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாம்


தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும் நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பந்த் வன்முறைகள், கொலைகள், முஸ்லிம் பகுதிகளில் தேடுதல் வேட்டை, வெடி பொருட்கள் பறிமுதல், தீவிரவாதிகள் கைது, கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற பீதிகளால் (Strategy of Tension ) முஸ்லிம்களை பொது சமூகங்களில் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலை ஒரு இருண்ட காலத்திற்கு கொண்டு செல்வதாகவே அமைந்துள்ளது. சட்ட வரம்புகள் அற்ற ஒரு வித்தியாசமான உலகில் வசிப்பதாகவே முஸ்லிம்கள் உணர்கிறார்கள்.

 
இதற்கு முன்பு 1998- ல் கோவை குண்டுவெடிப்பை காரணமாக வைத்து தொடர்ந்து தீவிரவாத பீதியும், பயங்கரவாத மாயையும் உளவுத்துறையால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து முஸ்லிம்களை மனரீதியாக அச்சுறுத்தி காவல்துறையின் கெடுபிடிகள் இரும்புக்கரம் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. ஒரு குற்றப்பரம்பரையாக பொது சமூகத்தில் சித்தரிக்கப்பட்டார்கள்.
 
இத்தகைய வீண்பழியால் ஏற்பட்ட மனக்காயங்கள், இழந்த குடும்ப உறவுகள், தனிமைபடுத்தப்பட்ட சமூக வாழ்க்கை, சின்னா பின்னமாக்கப்பட்ட சிறு குழந்தைகள், இளஞ்சிறார்களின் எதிர்கால வாழ்க்கை உள்ளிட்ட ஏராளமான இன்னல்களிலிருந்து மீண்டும் பொது சமூகத்தில் ஐக்கியமாவதற்கு 12 ஆண்டுகளுக்கும் மேலானது.
 
இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஏப்ரல் 17 அன்று நடந்த பெங்களூர் குண்டுவெடிப்பை காரணம் காட்டி தமிழக காவல்துறை மற்றும் கர்நாடக காவல்துறை இணைந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து கோவை, மேலப்பாளையம் என மீண்டும் தனது வேட்டையை துவங்கயுள்ளது. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும், அதே நேரத்தில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் விசாரணை செய்து குற்றவாளிகள் தீர்மானிக்கப்பட வேண்டுமேயன்றி இன்னார்தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்து விசாரணை மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது.
 
மதுரையில் ஏழு வெடிக்காத குண்டு சம்பவங்களை காரணம் காட்டி ஏறத்தாழ 500 முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் சசித்ரவதை செய்து Criminal Profiling என்ற குற்றப் பட்டியலை தயார்செய்துள்ளது. பரமக்குடி கொலை வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும் கா. மதார் சிக்கந்தர் என்பவரை வழக்கை ஒப்புக்கொள்ள நிர்பந்திந்து கடும் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.



முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வட மாநிலங்களில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த Unlawful Activities Prevention Act (UAPA) கறுப்புச் சட்டத்தை தமிழகத்திலும் காவல்துறை பிரயோகிக்க துவங்கியுள்ளது.



வடமாநிலங்களில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் காவல்துறையின் சிறப்பு பிரிவும், மத்திய உளவுத்துறையினரும் இணைந்து பொய்வழக்கு புணைந்து கைது செய்தார்கள்.பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்தது.ஆனால் சட்டவிரோத காவல், உடல் மற்றும் மணரீதியான சித்ரவதைகள், சிறைவாசம், தீவிரவாதி என்ற அடையாளம், குடும்பம் மற்றும் சமுகவாழ்வில் அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது.இவர்களிடம் மன்னிப்பும் தெரிவிக்கப்படவில்லை . மறுவாழ்வும் வழங்கப்படவில்லை.



ஆக தமிழகத்திலும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து செயல்படுதபடும் அரசு இயந்திரத்தின் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த போராட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்துகிறது.
 
 



0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza