ஜகார்த்தா: 2013ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வலுக்க பாலீ தீவுக்கு அப்போட்டி மாற்றப்பட்டது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து பெண்கள் வந்து கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய அடிப்படையிலான ஆடை, குர்ஆன் ஒதுதல் உள்ளிட்டவை அடங்கிய இந்த போட்டியின் இறுதியில் பங்காளதேஷ், நைஜீரியா, ஈரான், புரூனே, மலேசியா ஆகிய இடங்களைச் சார்ந்த 20 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் நைஜீரியாவை சேர்ந்த ஆயிஷா அஜிபோலா என்ற 21 வயது பெண் ‘உலக முஸ்லிமா 2013’ பட்டத்தை வென்றார்.
ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 பேர்களில் இருந்து நைஜீரியாவின் ஆயிஷா அஜிபோலா தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் வென்றதன் மூலம் 2.5 லட்சம் இந்தோனேஷிய ரூபாவும், மக்கா, இந்தியாவுக்கு இலவச சுற்றுப்பயண வசதியும் அஜிபோலாவுக்கு கிடைக்கும்.
0 கருத்துரைகள்:
Post a Comment