புதுடெல்லி:முஸாஃபர் நகர் கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டிய அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமுதாய தலைவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மனு அளித்துள்ளனர்.கடுமையான கலவரத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலவரம் பாதித்த பகுதிகளில் நிலைமையை மீட்டெடுத்ததாக அரசு கூறினாலும், இன்னமும் அங்குள்ள முஸ்லிம்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர் என்று கே.எம்.ஷெரீஃப் சுட்டிக்காட்டினார்.அகதிகளாக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான பாதுகாப்பை ஏற்பாடுச் செய்யவேண்டும். அமைதியை மீண்டும் நிலைநாட்டவும், எதிர்காலத்தில் மோதல்கள் நிகழாமலிருக்கவும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களை உட்படுத்தி சமாதான கமிட்டியை உருவாக்கவேண்டு என்று முதல்வருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.முன்பு நடந்த கலவரங்களைப் போலவே போலீஸ் மற்றும் அரசில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரக்காரர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாகிறது. போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தில் போதிய பிரதிநிதித்துவம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு சிறப்பு தேர்வு மூலம் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பரிந்துரைத்துள்ளது.
Info : Thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment