Monday, September 23, 2013

இந்தியாவில் வகுப்புக் கலவரம்: 10 ஆண்டுகளில் 2500 பேர் பலி!



இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த வகுப்புக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 8473 கலவரங்களில் கிட்டத்தட்ட 2500 பேர் கொல்லப்பட்டதாகவும், 28.688 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு உ.பி.,யில் செப்டம்பர் 15 வரை நடந்த முஸாஃபர்நகர் கலவரத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 1,697 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
2011-ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ள 580 கலவரங்களில் 91 பேர் பலியாகியுள்ளனர். 1,899 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு நிகழ்ந்த 701 கலவரங்களில் 116 பேர் பலியாகியுள்ளனர். 2,138 பேருக்கு காயம் ஏற்பட்டது. 2002-ஆம் ஆண்டு அதிகமான நபர்கள் கொல்லப்பட்டனர். கோத்ரா ரெயில் தீ விபத்திற்கு பிறகு நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையில் 1,130 பேர் 722 சம்பவங்களில் கொல்லப்பட்டனர். என அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Source : New india..tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza