Monday, September 23, 2013

முஸாஃபர் நகர் கலவரம்: கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு சிறை அதிகாரி வரவேற்பு!


bjp

உரய்: முஸாஃபர் நகர் வகுப்புக் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமிற்கு சிறை அதிகாரி கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜலோன் மாவட்டத்தில் உள்ள உரய் சிறைக்குள் நுழையும் சோமிற்கு சிறை அதிகாரி எல்.பி. சிங், கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறை அதிகாரியுடன் நிற்கும் சில போலீஸ் அதிகாரிகள் சோமிற்கு சல்யூட் அடிக்கின்றனர்.

முஸாஃபர்நகர் கலவரம் பரவ காரணமான வீடியோவை இணையதளம் வழியாக பரப்பியவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமு. சோமு, பா.ஜ.க. வின் இன்னொரு எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா மற்றும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. நூர் ஸலீம் ஆகியோர் கலவரம் தொடர்பாக நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

Info : thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza