Thursday, August 22, 2013

தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி மீது புதுவை அரசே உடனே நடவடிக்கை எடு :பாப்புலர் ஃப்ரண்ட்


சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. 

ஆனால் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை மேற்கண்ட சுதந்திர தின பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் கடந்த 16.08.2013ல் நடைபெற்றது. 


புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி தலைமையிலான காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதோடு, 28 முஸ்லிம்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தது.

மேற்கண்ட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காரைக்கால் S.P.வெங்கடசாமி மற்றும் உடனிருந்த காவல்துறையினரை கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று (21.08.2013) காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ஹாலித் முஹமம்து தலைமையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக உரிமையை நசுக்கும் விதமாக மேற்கண்ட S.P.வெங்கடசாமி தலைமையிலான காவல்துறை பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரையும் லத்தி சார்ஜ் மூலம் விரட்டியடித்ததோடு கைதும் செய்துள்ளது. பின்னர் முஸ்லிம்கள் மீது பழிப்போடும் எண்ணத்தில் அரசு பேருந்துகளை காவல்துறையே அடித்து நொறுக்கியது.

காரைக்கால் காவல்துறையின் இத்தகு ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதோடு உடனடியாக தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் S.P.வெங்கடசாமி மீது சட்ட ரீதியான மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படியும், கைது செய்த பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் புதுவை அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு 
ஏ.எஸ்.இஸ்மாயில்
மாநில தலைவர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza