Thursday, August 22, 2013

இந்தியாவில் பிற மதத்தினரை விட குறைந்த வருவாயில் வாழும் முஸ்லிம்கள்! - ஆய்வில் தகவல்!



இந்தியாவில் மத அடைப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் மற்ற மதத்தினரை விட முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக இருப்பதாக மத்திய அரசு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு கழகம் (NSSO) சார்பில் ‘இந்தியாவில் வசிக்கும் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை’ என்ற தலைப்பில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

அந்த கணக்கெடுப்பில்; இந்தியாவில் இருப்பதிலேயே முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக உள்ளனர் என்றும், சீக்கியர்கள் பிற மதத்தவரை விட நல்ல நிலையில் உள்ளனர். என தெரியவந்துள்ளது.
முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தினமும் 32.66 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில் அவர்களின் வருமானம் உள்ளது என அந்த ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. 
மேலும் சீக்கியர்களின் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.55.30 ஆகவும், இந்துக்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.37.50 ஆகவும், கிறிஸ்தவர்களின் செலவு ரூ. 51.43 ஆகவும் உள்ளது. எனவும் அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
2009-2010ல் சீக்கியர்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 659, அதே சமயம் முஸ்லிம்களின் செலவு ரூ.980 ஆக இருந்துள்ளது.
கிராமப்புறங்களில் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.833 ஆகவும், சீக்கியர்களுக்கு ரூ.1, 498 ஆகவும், கிறிஸ்தவர்களுக்கு ரூ.1, 296 ஆகவும், இந்துக்களுக்கு ரூ.888 ஆகவும் உள்ளது. அதேப்போல் நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 272, இந்துக்களுக்கு ரூ.1, 797, கிறிஸ்தவர்களுக்கு ரூ.2,053 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.2,180 ஆகவும் உள்ளன. என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 
Info : New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza