திருச்சியில் பள்ளி மாணவி தவ்பிக் சுல்தானா மர்ம மரணம் சம்மந்தமாக எஸ். டி.பி.ஐ கட்சியின் உயர் மட்டக்குழு, SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் M.நிஜாம் முஹைதீன் தலைமையில் தவ்பிக் சுல்தானா குடும்பத்தின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். தவ்பிக் சுல்தானா பிணமாக கிடந்த எடமலைப்பட்டி புதூர் ரெட்டை மலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தையும் நேரில் பார்வையிட்டனர்.பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களையும், திருச்சி மாநகர ஆணையர் அவர்களையும் சந்தித்து தவ்பிக் சுல்தானா மரணம் சம்மந்தமாக உண்மை குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது .
எனவே இந்த வழக்கை உடனே சிறப்பு புலனாய்வு (CBCID) மாற்ற வேண்டும் என SDPI சார்பாக இன்று(29/08/13)மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கொடுக்கப்பட்ட போது SDPI கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் முபாரக் அலிஉடன் SDPI நிர்வாகிகள் இருந்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் M.நிஜாம் முஹைதீன் தலைமையில் சென்னையில் தமிழக உள்த்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அவர்களை நேரில் சந்தித்து வழக்கை சிறப்பு புலனாய்வு (CBCID) விசாரணைக்கு மாற்ற மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தவ்ஃபிக் சுல்தானாவின் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி DGP உத்தரவிட்டுள்ளார்.
Source : sdpitamilnadu.org
0 கருத்துரைகள்:
Post a Comment