புதுடெல்லி:தீவிரவாத அரசியலை முடிவுக்கு கொண்டுவர அடக்கி ஒடுக்கப்பட்ட பிரிவினர் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று புதுடெல்லியில் சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய கருத்தரங்கில் அழைப்பு விடுக்கப்பட்டது.
‘டிஸ்கஸன் ஆன் பொலிடிக்ஸ் ஆஃப் டெரரிஸம்’ என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஒய்.எம்.சி.ஏ ஹாலில் நடத்திய கருத்தரங்கலில் பல்வேறு துறையைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
கருத்தரங்கை எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார்.அவர் தனது உரையில் கூறியது: ஈகைப்பெருநாளை கொண்டாடும்போதும் முஸ்லிம்களுக்கு கடந்த பல நாட்களாகமகிழ்ச்சி இல்லை.பயமும், பீதியும் அவர்களின் உள்ளங்களை வாட்டியது.தான் செய்த தவறு என்ன? என்பதை அறியாமலேயே பல முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இக்கேள்விக்கு பதில் கூற ஆட்சியாளர்களை நிர்பந்திப்பதற்கு எஸ்.டி.பி.ஐ மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் ஒன்றிணையாமல் வேறு வழியில்லை. இவ்வாறு அபூபக்கர் கூறினார்.
பத்தேஹ்பூர் இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் தனது உரையில்:
பெருநாள் போன்ற கொண்டாட்ட வேளைகளில் கூட தீவிரவாத வேட்டையின் பெயரால் சிறைகளில் வாழ்க்கையை கழிக்கும் நிரபராதிகளை குறித்து சிந்திக்கவேண்டும். எத்தனைபேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து விபரம் இல்லை. மஹராஷ்ட்ராவில் மட்டும் கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம்
கூறுகிறது. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வெளியே வராமலிருக்க அவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் சாட்டப்பட்டுள்ளன. இத்தகைய நிரபராதிகளுக்கு சட்டரீதியான வழிமுறைகள் உள்பட பல்வேறு வழிகளில் உதவிச் செய்ய அமைப்புகள் முயற்சிக்க வேண்டும்.
தேஜஸ் பத்திரிகையின் மேனேஜிங் எடிட்டர் பேராசிரியர் பி.கோயா தனது உரையில்:எந்தவொரு அரசு நிறுவனங்களுக்கும் கட்டுப்படாத உளவுத்துறை ஏஜன்சிகள் தாம் உண்மையில் ஜனநாயக இந்தியாவை
கட்டுப்படுத்துகின்றனர். பரஸ்பரம் தீவிரவாத குற்றச்சாட்டை எழுப்பும்
தரமற்ற அரசியலை கைவிட்டு நீதிக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
லோக் ஜனசக்தி பொதுச் செயலாளர் அப்துல் காலிக் தனது உரையில்:
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை வைத்து அரசு அரசியல் விளையாட்டை ஆடி வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களின் வழக்கை நடத்த பொருளாதார உதவியை வாக்களித்துள்ளது அரசு. ஆனால், 10,14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்களின் புனர் வாழ்வுக்காக சிறு விரலை கூட அரசு அசைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் அப்துல் காலிக்.
இக்கருத்தரங்கில் இறுதி உரையாற்றிய எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் தனது உரையில்: தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அரசுக்கு தங்களது ஊழலை மறைப்பதற்கான ஒரு உபகரணமாகும். இச்சூழலில் இருந்து விடுதலை பெற அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.இதன் முதல் படியாக இந்த பணிக்காக எஸ்.டி.பி.ஐ முன்வந்துள்ளது. இக்கருத்தரங்கிற்கு எஸ்.டி.பி.ஐயின் துணைத்தலைவர் ஹாஃபிஸ் மன்சூர்
அலிகான் மட்டுறுத்துனராக இருந்தார்.
இந்த கருத்தரங்கில் ச்ட்பி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழக மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்களும் கலந்து கொண்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment