SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:—
“நம் நாடு 67 வது சுதந்திர தினத்தில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டு விடுதலைக்காக ஜாதி, மதங்களை கடந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். அதே நேரம் சுதந்திற்காக நம் முன்னோர்கள் எந்த கனவோடு போராடினார்களோ அவை நமது ஆட்சியாளர்களால் நனவாக்கப்படவில்லை. மதவெறி சக்திகள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் தோற்றம் உருவாக்கப்படுகிறது. லஞ்சமும், ஊழலும் நாட்டின் வளத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்றன.
மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால் இலங்கை தமிழர்கள் அல்லலுறும் அவலம், தமிழக மீனவர்கள் நாளும் பாதிக்கப்படும் துயரம். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நாளும் பிரச்சனைகள். ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவோடு இந்தியா இணங்கி போகும் அவலம்.
சாதி,மத ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், ஜனநாயக விரோத கருப்புச் சட்டங்கள், தாராளமயம், உலகமயம் என்ற தவறான பொருளாதாரக் கொள்கையால் வறுமை, விலையேற்றம், என நம் நாடு பெரும் பின்னடைவை சந்தித்து வரும் இவ்வேளையில் நம் முன்னோர்கள் கண்ட கனவை நனவாக்கிடவும் சாதி, மத ஏற்றத் தாழ்வுகளற்ற நாடாக நம் நாட்டை கட்டியெழுப்பி உண்மையான ஜனநாயக மற்றும் மதச் சார்பாற்ற நாடாக நிலைநிறுத்தவும், நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் பெற்றிடவும், மதவெறி சக்திகளை சாய்த்திடவும், லஞ்ச லாவண்யமற்ற நாட்டை உருவாக்கவும் நாம் அனைவரும் சபதமேற்போம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment