Tuesday, August 13, 2013

‘குஜராத் இனக் கலவரத்திற்காக பா.ஜ.க அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்களா?’ - காஷ்மீர் முதல்வர் கேள்வி!

கிஸ்த்வார் பகுதி கலவரத்திற்காக ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சர் சஜ்ஜத் அகமத் ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனக் கலவரத்திற்கு அம்மாநில அமைச்சர்களை ராஜினாமா செய்யுமாறு பா.ஜனதா தலைவர்கள் ஏன் கேட்கவில்லை?’ என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் தமது ட்விட்டர் தளத்தில், ‘2002 ல் குஜராத் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார் அல்லது ராஜினாமா செய்ய முன்வந்தார் என்ற தகவலையாவது அருண் ஜெட்லி அப்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்தாரா?’ கிஸ்த்வார் கலவரத்தில் 1 இந்து, 2 முஸ்லிம்கள் என மூன்று துரதிர்ஷ்டவசமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்; எனது அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் 2002 ல் பா.ஜனதா இதேபோன்று நடந்துகொண்டதா?’ என அவர் கூறியுள்ளார்.
Source: Newindia.tv/tn

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza