Thursday, August 15, 2013

ஜனநாயகத்தைவலிமைப்படுத்துவோம்!சுதந்திரத்தை கொண்டாடுவோம்!!: பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் சுதந்திர தினச் செய்தி

நாம் அனைவரும் 67 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். சுதந்திர உணர்வுகளால் ஒவ்வொரு இந்தியனின் உள்ளமும் பூரிப்படையக்கூடிய இந்நன்னாளில் நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும், உறுதியையும் நினைவு கூர்வதோடு நமது முன்னோர்கள் கண்ட கனவை வருங்காலத்தில் நிறைவேற்றுவேன் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை , சோசியலிசம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள சுதந்திர இந்தியா இன்று கார்ப்பரேட் முதலாளிகள் , குடும்ப அரசியல்வாதிகள் மற்றும் உயர் ஜாதியினர் ஆகியோரின் கரங்களில் சிக்கித் தவிக்கும் நிலையையும் , சுதந்திரத்தின் பலனை பெரும்பான்மையான மக்கள் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாபகரமான நிலையையும் மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலையீடு அதிகமாக இருக்கும் அபாயகரமான நிலையையும் நம்மால் காண முடிகிறது.


சுதந்திரம் அடைந்து ஆறு தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும் தலித்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தலித்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுவதும், ஆதிவாசிகள் பலவந்தமாக தங்களுடைய சொந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவதும், முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதும், தீவிரவாத பழிசுமத்தப்படுவதும், போலி என்கவுண்டர்களில் கொல்லப்படுவதும் , விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதும் மற்றும் UAPA போன்ற கொடூரமான கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பல்லாண்டுகள் சிறைகளில் அடைத்து வைப்பதும் இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. ஏன் சுதந்திர இந்தியாவில் சுதந்திர தினத்தை கொண்டாட கூட முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடமால் தனித்தே இருக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் மோசமான மனநிலையை வெளிப்படுத்துகிறது.

தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் இந்த வருடம் “சுதந்திரத்தின் காவலாளிகளாவோம் ” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் சுதந்திர தினக் கூட்டம் நடத்த இருக்கிறது. ஜனநாயகத்தை வலிமைப்படுத்திட , சுதந்திரத்தை கொண்டாடிட அனைவரும் ஒன்றிணைவோம். சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
A.S.இஸ்மாயில்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza