Monday, August 5, 2013

மேலப்பாளையத்தில் வெடிமருந்து பறிமுதல்! SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கள ஆய்வு!


நெல்லை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதிகளாக மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக கடந்த 2.7.2013 அன்று SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.   

இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M.நிஜாம் முகைதீன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியது: “1992 முதல் பல்வேறு பிரச்சனைகளையும், காவல்துறையின் மனித உரிமை மீறலையும் சந்தித்து அச்சத்துடன் மேலப்பாளையம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மேலப்பாளையத்தில் வெடிகுண்டு செய்ய பயன்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை வைத்திருந்ததாக கூறி ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது பற்றி தினமும் பத்திரிக்கைகள் சமூகத்தில் பீதியை ஏற்படுத்தும் செய்திகளை பீதியூட்டும் விதத்தில் எழுதி வருகின்றன. மேற்கண்ட விஷயத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மூலப் பொருட்களை, காவல்துறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உண்மையை வெளியிடவில்லை. இதனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலப்பாளையம் முஸ்லிம்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.


மேலும் 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போதும் வெடிகுண்டு மூலப்பொருள் கைப்பற்றப்பட்ட போதும் சட்டப் பூர்வமான உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. மேலும் மேற்கண்ட கைது நடவடிக்கையின் போது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய வண்ணமும், சட்டத்திற்கு  புறம்பான முறைகளில் மேற்கண்ட கைதுச் சம்பவத்தையும் வெடிகுண்டு மூலப் பொருட்கள் கைப்பற்றபட்ட போதும் நடத்தியுள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்கள் ராம கிருஷ்ணன், நாகராஜன் மற்றும் ஏட்டு குமரேசன் ஆகியோர் முஸ்லிம் விரோத மனநிலை (ANTI MINORITY SENTIMENTS) கொண்டவர்கள் என்று காவல்துறை அதிகாரிகளால் மேற்கண்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள். ஏற்கனவே இவர்கள் மேலப்பாளையம் சரகத்தில் பணி செய்த போது முஸ்லிம்களுக்கெதிராக மனித உரிமை மீறலிலும், அராஜகப் போக்கோடும், சட்ட விரோதமாக நடந்து கொண்டவர்கள்.

மேலும் கைது நடவைக்கையின் போதும், தேடுதலின் போதும் தேவையற்ற பீதியை உண்டாக்கி உள்ளவர்கள். மேலும் மேலப்பாளையம்  ஜமாஅத் மற்றும் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையற்ற பீதி வேண்டாம் என்றும், மேற்கண்ட நடவடிக்கைகள் சட்டபூர்வமாக நடத்தப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய முற்பட்ட போது, அவர்களுக்கு எந்தவித சட்டபூர்வ ஒத்துழைப்பையும் காவல்துறை அதிகாரிகள் வழங்கவில்லை.

மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற காவல் அதிகாரிகள், அமைதியான முறையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் மேற்கண்ட அதிகாரிகள் அதுபோல செயல்படவில்லை. எனவே மேலப்பாளையம் பகுதியில் நியாயமான பாரபட்சமற்ற, சிறுபான்மை விரோத போக்கில்லாமல் செயல்படவில்லை. எனவே மேலப்பாளையம் பகுதியில் நியாயமான பாரபட்சமற்ற, சிறுபான்மை விரோத போக்கில்லாமல் செயல்படக்கூடிய அதிகாரிகளை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காதவாறும் மக்களிடையே பீதியற்ற அச்சமற்ற சூழல் நிலவ திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இக்கள ஆய்வின் போது SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான், நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, துணை தலைவர் K.S.சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் அன்வர் முஹைதீன் மற்றும் தொகுதி, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.         


பிஸ்மி வீட்டில் கள ஆய்வின் போது…  


முஹம்மது தாசின் வீட்டில் கள ஆய்வின் போது…  


கட்ட சாகுல் வீட்டில் கள ஆய்வின் போது…  


பிஸ்மி வீட்டில் கள ஆய்வின் போது…  


சம்சுதீன் வீட்டில் கள ஆய்வின் போது…  


கலெக்டரிடம் மனு அளித்த பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்…


ஜமாத்தார்களிடம் உண்மை நிலையை விவரிக்கும் போது…


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza