Thursday, August 8, 2013

வரலாற்றுச் சின்னங்களை தொழுகைக்காக திறந்து கொடுக்க சிறுபான்மை கமிஷன் கோரிக்கை!

புதுடெல்லி: பாதுகாப்பில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை தொழுகைக்காக திறந்து கொடுக்கவேண்டும் என்று தேசிய சிறுபான்மை கமிஷன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கமிஷனின் சிபாரிசை தொடர்ந்து டெல்லியில் உள்ள 31 வரலாற்று நினைவிடங்களைக் குறித்து ஆய்வு செய்ய மத்திய கலாச்சார அமைச்சகம் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு (எ.எஸ்.எ) உத்தரவிட்டுள்ளது.


வரலாற்று நினைவிடங்களை எ.எஸ்.எ ஒழுங்காக பராமரிப்பதில்லை என்றும், அவற்றை தொழுகைக்காக திறந்து கொடுத்தால் அப்பகுதியில் உள்ளவர்களும், முஸ்லிம்களும் நன்றாக பராமரிப்பார்கள் என்று கமிஷன் கருதுகிறது. வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்புக் குறித்தும், பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகளைக் குறித்தும் ஆய்வுச் செய்ய எ.எஸ்.எயிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜ்ஹத் ஹபீபுல்லாஹ் தெரிவிக்கிறார். இந்த சர்வே சில மாதங்களில் முடிவடையும் என்று எ.எஸ்.ஏவின் இயக்குநர் ஜெனரல் ப்ரவீண் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

செய்தி: தேஜஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza