Sunday, August 4, 2013

மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் அப்பாவிகள்:NCHROவின் உண்மை கண்டறியும் குழு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று வீட்டில் வெடி குண்டு வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தி மேலும் சேலம் பி.ஜே.பி பொது செயலாளர் ஆடி ட்டர் ரமேஷ் வழக்கிலும் பொய்யாக குற்றம் சுமத்தி அப்பாவி முஸ்லிம்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . இது குறித்து NCHRO வின் உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரித்தனர்.


பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த NCHRO தமிழ் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எந்த குற்றமும் செய்யாதவர்கள் இது வரை அவர்கள் மீது எந்த வழக்கும் பதிய செய்யப்படவில்லை.கைது செய்யப்பட்டவர்கள் வீட்டில் இருந்து காவல்துறை 18 கிலோ வெடி மருந்து எடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளது ஆனால் எடுத்த பிறகு அதனை யாரிடமும் காட்டவும் இல்லை,பத்திரிக்கையாளர்களிடமும் காட்டவும் இல்லை.மேலும் இந்த வழக்கை சம்மந்த இல்லாமல் கர்நாடக குண்டு வெடிப்புடன் சம்மந்த படுத்த கர்நாடக காவல்துறையை தமிழக காவல்துறை அழைத்துள்ளது .அது போக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக செயல்ப்படும் CTM அறக் கட்டளையை முடக்க காவல்துறை சதி செய்கிறது .இதற்கு கர்நாடக காவல்துறையும் உடந்தையாக உள்ளது.மேலும் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை பாரபட்ச முறையில் விசாரணை செய்து அவர்களை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என தனது பேட்டியில் கூறினார்.அப்பொழுது அருகில் மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் ராஜா முஹம்மத்,மேலும் வழக்கறிஞர்கள் அப்பாஸ்,சபி,அப்துல் காதர்,எஸ்.டி.பி.ஐ மாநில செயற் குழு உறுப்பினர் உஸ்மான் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.


தமிழ் முரசில் வந்த செய்தி

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza