Sunday, August 18, 2013

சிறுபான்மை மக்களுக்கு கல்வி உதவித்தொகை:மோடி அரசுக்கு கண்டனம்!



சிறுபான்மை சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பை (கல்வி உதவித்தொகை) எதிர்க்கும் குஜராத் அரசின் நடவடிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கண்டித்துள்ளது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட ஐந்து மதச் சிறுபான்மையினரில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பதற்கான திட்டத்தை குஜராத் மோடி அரசு எதிர்க்கிறது.

இத்திட்டத்தை  எதிர்த்து மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. இதற்கு பதில் அளித்து மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் குஜராத் அரசை மத்திய அரசு விமர்சித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தாம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக சச்சார் கமிட்டியின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு ஸ்காலர்ஷிப் திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதற்கான செலவில் 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னர் இத்திட்டத்தை குறித்து கேள்வி எழுப்பி குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு தள்ளுபடிச் செய்யப்பட்டிருந்தது.
இத்திட்டம் சமூக நீதியை உறுதிச் செய்வதற்கான திட்டம் என்று மனுவை தள்ளுபடிச் செய்த குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

-New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza