Sunday, August 18, 2013

சுதந்திர தினம் கொண்டாட தடை! டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை போராட்டம்!


சென்னை: இந்திய தேசம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, 67வது சுதந்திர தின விழா எல்லா தரப்பு மக்களாலும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அனைத்து மாநிலங்களிலும் கொடியேற்றம், தியாகிகளை நினைவுகூறுதல், உறுதிமொழி எடுத்தல், சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் காவல்துறை சுதந்திர தினம் கொண்டாட அனுமதி மறுத்து பல்வேறு இடையூறுகள் தந்து, முஸ்லிம்களை கைது செய்து ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் அணுவகுப்புடன் கூடிய சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடி வந்த நிலையில் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிம்கள் கொண்டாடுவதற்கு அனுமதி மறுத்து, கைது செய்வது தமிழகத்தில் ஜனநாயக அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? என்ற கேள்வி வலுவாக எழுபியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத போக்குடன் செயல்படும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று (17.8.2013) மாலை 4.30 மணியளவில் மன்றோ சிலை அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களது தலைமையில் நடைபெற்ற டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza