உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் என்பவரிடம் தொடர்பு கொண்ட பலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதெ என்பவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அம்சத்திலுள்ள குறையொன்றைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், கலீலின் வேண்டுகோளுக்கு எவ்வித மறுமொழியும் ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கவில்லை.
இதனால், ஆத்திரமுற்ற கலீல், ஃபேஸ்புக் நிறுவனரான மார்க்-கின் ஃபேஸ்புக் பக்கத்தையே, முன்னதாக அவர் சுட்டியிருந்த பாதுகாப்புக் குறைபாட்டின் வழியே கடத்திக் கொண்டு விட்டார். அலறியடித்த ஃபேஸ்புக் நிர்வாகம், இம்முறை உடனடியாக அந்த ஃபேஸ்புக் ஓட்டையை அடைத்து பாதுகாப்பைக் கூட்டியது.
பொதுவாக, இப்படி குறைகளைச் சுட்டுவோரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு நிறுவனங்கள் பரிசளிப்பது வழக்கம். ஆனால் கலீலுக்கு பரிசளிக்காததுடன், ஃபேஸ்புக் அவர் பக்கத்தையும் முடக்கிவைத்தது.
இதனால் மற்ற ஹேக்கர்கள் (கணினி கடத்தலர்கள) கலீலுக்கு பரிசளிக்க முன் வந்துள்ளனர். குறிப்பாக, பியான்ட் ட்ரஸ்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மார்க் மெய்பிரட் ஹேக்கர்களிடம் இருந்து ரூ. 642,957 நிதி திரட்ட வழிவகை செய்துள்ளார. ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கச் செய்தும் கலீலுக்கு ஃபேஸ்புக் பரிசு அளிக்காதது நியாயமில்லை என்று மெய்பிரட் மற்றும் பல ஹேக்கர்கள் தெரிவித்துள்ளன.
Info : Inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment