குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரிட்டன் விருந்தினராக அழைக்கவில்லை என பிரிட்டனுக்கான இந்திய தூதர் ஜேம்ஸ் டேவிட் பெவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக மோடி இங்கிலாந்துக்கு வருகை தந்து அங்குள்ள பாராளுமன்றத்தில் எதிர்கால இந்தியா பற்றி உரையாற்ற வேண்டும் என இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக்கப்பட்டன.
மோடிக்கு விசா மறுத்த இங்கிலாந்து, மோடியின் நிர்வாகத் திறமையை கண்டு அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் அமெரிக்காவும் விசா வழங்கும் எனவும் பாஜகவினர் ஊடகங்களின் மூலம் விவாதமாக்கினர்.
இந்நிலையில் நரேந்திர மோடியை பிரிட்டன் அரசு விருந்தினராக அழைக்கவில்லை என பிரிட்டனுக்கான இந்திய தூதர் ஜேம்ஸ் டேவிட் பெவன் மறுப்பு தெரிவித்துள்ளதால் இச்செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஜேம்ஸ் பெவன் மேலும் கூறுகையில்; குஜராத் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத வரை மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு சாத்தியமில்லை எனவும். குஜராத் இனக்கலவரத்தில் பலியான 3 பிரிட்டன் குடிமக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலேயே கடந்த ஆண்டு நரேந்திர மோடியை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்; கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் இனக்கலவரத்திற்கு பின், மோடியுடனான உறவில் இங்கிலாந்து அரசு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டது. எனவும் தெரிவித்தார்.
-New inda.tv
0 கருத்துரைகள்:
Post a Comment