குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரிட்டன் வருகை தந்தால் அதனை எதிர்ப்போம் என்று பிரிட்டனில் உள்ள சீக்கியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுக்குறித்து பிரிட்டனில் இயங்கும் சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமரிக் சிங் கூறும்போது; ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருடன் பகைமை உணர்வு மற்றும் வெறுப்புணர்வான அணுகுமுறையை மோடி கடைப்பிடிக்கிறார். ஆகையால் அவர் பிரிட்டன் வருவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
மோடியை அழைக்க பிரிட்டன் அரசு தயாராகாது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தகையதொரு சர்ச்சைக்குரிய தலைவரை பிரிட்டனுக்கு அழைப்பு விடுத்த எம்.பிக்களின் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புகள் என்ன கருத்தைக் கொண்டுள்ளனவோ அதுதான் எங்களுடையது.’ இவ்வாறு அமரிக் சிங் கூறியுள்ளார்.
-New india.tv
0 கருத்துரைகள்:
Post a Comment