ஐரோப்பிய யூனியனைப் போன்று வளைகுடா நாடுகளும் பொதுவான ஒற்றை நுழைவு விசா அளிக்கும் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த முடிவு செய்துள்ளன.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து பொதுவான ‘செங்கன் விசா’ என்ற ஒற்றை நுழைவு நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம், இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் இந்த ‘செங்கன் விசா’ மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும். இதனால் அந்நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன், இது எளிதான நடைமுறையாகவும் இருக்கிறது.
இம்மாதிரியான பொதுவான ஒற்றை நுழைவு விசா நடைமுறையை வளைகுடா நாடுகளுக்கும் கொண்டுவர வளைகுடா கூட்டுறவு கவுன்சில் ஜி.சி.சி முடிவு செய்துள்ளது. இந்நடைமுறையை வரும் 2014-ம் ஆண்டில் முதல் செயல்படுத்த ஜி.சி.சி திட்ட்டமிட்டுள்ளது. ஜி.சி.சி கவுன்சிலில் சவுதி அரேபியா, யு.ஏ.இ, குவைத், ஓமன், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் புதிய திட்டத்தால் பயணிகளின் பயண விதிமுறைகள் எளிதாக்கப்படும் என்று கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கும் அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடைமுறையை செயல்படுத்துகின்றன.
இந்தப் புதிய விதிமுறை மூலம், ஒற்றை நுழைவு விசா பெறும் பயணிகளுக்கு ஒரு மாதத்திற்கான அனுமதியும், பன்மடங்கு நுழைவு விசா பெற விரும்புபவர்கள் போதுமான நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்களை காட்டினால் ஒரு வருடத்திற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று கூட்டுறவு கவுன்சில் தெரிவித்துள்ளது.
Info ; Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment