ராணுவம் ஏற்படுத்திய தடைகளையும் மீறி ஜனநாயகத்தைக் கோரி எகிப்தில் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடந்தேறின.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன.
தலைநகரின் நஸ்ர் சிட்டி, மொஹந்திஸினி ஆகிய இடங்களில் நடந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கு எதிராக நடந்த பேரணிகளில் மிக அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். ராணுவம் ஏற்படுத்திய இடைக்கால அரசு பதவி விலக மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸி பிறந்த நகரமான கல்யுபுஆவில் ஏராளமான இடங்களில் பேரணிகள் நடந்தன.
கஸா சிட்டி, ஸகாஸிக், நைல் நதியோர மினுஃபியா, தக்காஹிலியா ஆகிய இடங்களிலும் பேரணிகள் நடந்தன.
ராபிஆ அதவிய்யாவை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளையும் ராணுவம் மூடியிருந்தது. விடுதலை சதுக்கத்திலும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள அல்காஇத் இப்ராஹீம் மஸ்ஜிதும், கிழக்கு கெய்ரோவில் உள்ள அல் இமாம் மஸ்ஜிதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன.
மக்கள் போராட்டம் மற்றும் தர்ணா போராட்டத்திற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உள்துறை அமைச்சகத்தின் மிரட்டலையும் மீறி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அழைப்பு விடுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
-New india.tv
0 கருத்துரைகள்:
Post a Comment