இஸ்லாமிய பொருளாதாரச் சட்டங்களின் அடிப்படையில் நிதி நிறுவனம் துவங்க கேரள அரசுக்கு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
சேரமான் ஃபினான்ஸியல் சர்வீஸ் லிமிட்டட் (CFSL) என்ற பெயரில் கேரள மாநில தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் நிதி நிறுவனம் Non banking finance company அடிப்படையில் இயங்கும் இந்நிறுவனத்திற்கு ரூ.40 கோடி நிதி திரட்ட முடியும் என்று கேரள அரசு நம்புகிறது.
இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் இந்நிறுவனம் வட்டியை வசூலித்தல், வட்டி அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது.
இந்நிறுவனம் அடிப்படை கட்டமைப்புகள், சேவைகள் மற்றும் தயாரிப்பு துறைகளை இலக்காக வைத்துள்ளது. ஆனால், புகையிலை தயாரிப்புகள், மதுபானம், சூதாட்டம் மற்றும் ஊக வியாபாரங்களில் ஈடுபடாது.
Info : New india.tv
0 கருத்துரைகள்:
Post a Comment