"2014-2015 கல்வியாண்டிலிருந்து உயர் கல்வியில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை அறிமுகப்படும்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மம்தா இதனை தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையினர் விற்பனையகங்களை நிறுவுதல், சிறுதொழில்களைத் தொடங்குதல் போன்ற இதர தொழில் வாய்ப்புகளையும் கிடைக்கச் செய்யப் படும் என்றும்,
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களும், குழந்தைகளும் கல்வியில் முன்னேறி மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், இதர துறைகளில் வல்லுநர்களாகவும் உயரவேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் மம்தா தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment