நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும், மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் பெருநாள் தினத்தை ஏழைகளும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மத்தை முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் ஆகிய அனைவரின் மீதும் இஸ்லாம் கட்டாய கடமையாக்கியுள்ளது.
அதனடிப்படையில்,புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் கடந்த புதன் கிழமை (07.08.2013) அன்று ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்) விநியோகம் செய்யப்பட்டது. புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் வீடு வீடாக சென்று தகுதியுடையோருக்கு நேரில் வழங்கினர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள் தங்கள் தேவைகளை அமைத்து கொள்வதற்கு வசதியாக ஃபித்ரா ரொக்கப் பணமாகவே வழங்கப்பட்டது. சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பயனடைந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment