2010-ஆம் ஆண்டு முடங்கிய ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க உள்ளது. அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நேற்று இரவு காலதாமதமாக துவங்கிய பேச்சுவார்த்தையின் விபரங்கள் இன்று வெளியாகும் என கருதப்படுகிறது.
இஸ்ரேல் சார்பாக சட்ட அமைச்சர் சிபி லிவ்னியின் தலைமையிலான குழுவும், ஃபலஸ்தீன் சார்பாக ஸாயிப் எரகாத்தின் தலைமியிலான குழுவினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி தலைமையில் கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வந்தன.
பேச்சுவார்த்தை துவங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 104 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்ய இஸ்ரேல் காபினட் நேற்று முன் தினம் அனுமதி அளித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment