டில்லி: போலி போலி என்கவுண்டருக்கு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் இல்யாஸ் தும்பே அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
"2009 ஏப்ரல் 1 முதல் பிப்ரவரி 15 வரையிலும் காவல்துறை (Police), பாதுகாப்புத் துறை (Defense) மற்றும் துணை இராணுவத்தினரால் (Paramilitary Forces) நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் 555 வழக்குகள் போலி என்கவுண்டர்கள் என தேசிய மனித உரிமை கழகம் (NHRC) பதிவு செய்துள்ளாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிர்ச்சி மற்றும் அதிருப்தி வெளிக்காட்டியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் நடந்து வரும் போலி என்கவுண்டர்கள் குறித்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் அமைப்புகளும் குரல் எழுப்பியே வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விவகாரம் எந்தவொரு ஆளும் அரசாங்கங்களினாலும் முறையாக கையாளப்படவில்லை. ஆளும் அரசுகள் சரியான நேரத்தில் தலையிட்டு இதனை முறைப்படுத்தாமல் போனதே இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிட்டது.
பல வழக்குகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறையினர் அரசினால் பாதுகாக்கப்பட்டும் , மேலும் சில வழக்குகளில் கதாநாயகர்களாகவுமே கொண்டாடப்பட்டுள்ளனர். இத்தகைய காவல்துறை மற்றும் ஆயுதமேந்தியப் படைகளை பாதுகாக்கும் கருவிகளாகவே AFSPA மற்றும் UAPA போன்ற கருப்புச் சட்டங்கள் எப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகள் போலி என்கவுண்டரில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதிலும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகளை முடிவுக்கு கொண்டு வருவதிலும் அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் ஆர்வமே உள்ளதாக நிரூபிக்கிறது.
இஷ்ரத் ஜஹான் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் போலி என்கவுண்ட்டர் என்பது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னரே நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடத்தப்பட்ட எல்லா என்கவுண்டர்கள் குறித்தும் சி.பி.ஐ விசாரணை தொடங்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அரசை கேட்டுக் கொள்கிறது. இத்தகைய சட்டவிரோத கொலைகளை செய்வதற்கு ஆயுதமேந்தியப் படைகள் பயன்படுத்தும் கருப்புச் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமெனவும் அரசை வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் (இழப்பீட்டுத் தொகை) வழங்க வேண்டுமெனவும் நாம் இந்த அரசை வலியுறுத்துகிறோம்" என அவர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment