லக்னோ: நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை முன்னாள் தலைவர் எஸ்.ஆர். தாராபுரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் நிலை என்னவாயிற்று என்பது கூட அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றும் அப்படி காணாமல் போனவர்கள் காவல்துறையினர் ரகசிய பாதுகாப்பில் எடுக்கப்பட்டு குண்டுவெடிப்பு தொடர்பான விசயங்களில் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார்.
மேலும் உத்தரப்பிரதேச காவல்துறையினரிடம் மதவாதபோக்கு மிகுந்துள்ளதாகவும் இன்னும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் மோசமான மதவாத போக்கு கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இதனால் அவர்கள் சிறுபான்மையினரிடம் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகளின் இந்த கொடுமையான நடைமுறை இனிமேலும் தொடராமல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.ஆர். தாராபுரி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
-inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment