Monday, July 1, 2013

மதுரா தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக வி.எச்.பி தலைவர் கைது

சென்ற மாதம் மதுராவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகதிஷ் அனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 30 அன்று மதுராவில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கோசிகலன் பகுதியில் 4 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இக்குண்டுகளை தயாரித்தது மற்றும் குண்டுகளை வைத்ததாக மதுரா விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகதிஷ் அனந்த் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டு வெடிப்பின் போது ஜெகதிஷ் அவ்விடத்தில் இருந்ததை உறுதிப்படுத்தும் சிசிடிவி ஆவணங்கள் உள்ளதாக கூறும் காவல்துறையினர் மத கலவரத்தை உண்டாக்க ஜெகதிஷ் முயன்றதாக கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் நடந்த கலவரத்திற்கு விசுவ இந்து பரிஷத்தே காரணம் என்று அப்போதே முஸ்லீம் அமைப்பை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த கலவரத்தில் பர்ஸானாவின் இரு மருமகன்கள் மற்றும் சலாஹூத்தின் உள்ளிட்ட நால்வர் எரித்து கொல்லப்பட்டனர்.
அப்போதே இக்கலவரத்திற்கு காரணமானவராக பிஜேபி உள்ளூர் தலைவர் பகத் பிராசாத்தை குற்றம் சாட்டி பிரபல நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான குழு அறிக்கை சுமத்தியதும் அவ்வறிக்கையின் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
 Info: inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza