ஃபலஸ்தீனின் புதிய பிரதமராக பேராசிரியர் ரமி ஹம்தல்லாவை அறிவிப்பு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிபர் மகமூத் அப்பாஸ். அதிபரின் இந்த நியமனத்திற்கு ஹாமாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது பிரதமராக இருக்கும் ஸலாம் ஃபயத், இம்மாதம் பதவியில் இருந்து விலகுவதை அடுத்து, புதிய பிரதமரை அப்பாஸ் நியமித்துள்ளார். ஹம்தல்லா தலைமையில் புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் மகமூத் அப்பாஸின் இந்த நியமனத்துக்கு காஸா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரமி ஹம்தல்லாவின் நியமனம் சட்டவிரோதமானது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஃபலஸ்தீனின் மேற்குக் கரை பகுதியை மகமூத் அப்பாஸ் தலைமையிலான ஃபதா கட்சியும், காஸா பகுதியை ஹமாஸ் இயக்கமும் ஆட்சி செய்து வருகின்றன.
முன்னதாக இரு இயக்கங்களும் சேர்ந்து கூட்டு அரசை அமைப்பது தொடர்பான பேச்சுகள் நடந்து வரும் நிலையில், புதிய பிரதமரின் நியமனம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
-New India
-New India
0 கருத்துரைகள்:
Post a Comment