டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 போட்டித் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகள் ஜூன் 14 முதல் ஜூலை 26 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.
இதில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு 04567 221160, 94889 46271, 73730 03584 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-keelakarai times
0 கருத்துரைகள்:
Post a Comment