மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு UAPA போன்ற கருப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடிவரும் முஸ்லிம் சிறை கைதிகளின் வழக்குகளை துரிதமாக முடிக்கும் வகையில் விரைவு நீதி மன்றங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளது.
நாடு முழுவதும் சிறைகளில் வாடி வரும் நூற்றுக்கணக்கான கைதிகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு விரைந்து விசாரணை நடத்தப்படுவதற்கு இது போன்ற துரித நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயமாகும். அதே வேளையில் அந்த கைதிகள் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை ஏற்பாடு செய்ய முடியும்.
மேலும் UAPA சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த திருத்தங்கள் போலிசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகின்றது. அதில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு UAPA சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறையினர் தண்டிக்கப்பட வகை செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொண்டது.
மற்றுமொரு தீர்மானத்தில், கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாய்வாளரும் மனித உரிமை ஆர்வலருமான ஜெயப்பிரகாஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மதவாத மற்றும் உயர்சாதியினரின் சொத்தாக இருந்த வரலாற்றை மாற்றியமைக்க அவர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஒடுக்கப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்களின் உரிமைக்காக அவர் தீரத்துடன் போராடினார். சிறந்த கல்வியாளர்கள் சிறந்த சமூக ஆர்வலர்களாகவும் இருப்பர் என்பதை நிருபித்தார் அவர் என்பதையும் பதிவு செய்தது தேசிய செயற்குழு.
தேசிய தலைவர் கே.எம்.ஷெரிப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் பொது செயலாளர் ஓ.எம்.ஏ.சலாம் பணிகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பித்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment