Friday, May 24, 2013

காலித் முஜாஹித் கஸ்டடி மரணம்:போலீஸ் அதிகாரிகளை விசாரணைச் செய்ய எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!


புதுடெல்லி: தீவிரவாத வழக்கில் குற்றமற்றவர் என விடுவிக்கப்படவிருந்த காலித் முஜாஹித், போலீஸ் காவலில் மரணித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை கைதுச் செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

காலிதின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது. காலித் முஜாஹித் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.


காலிதின் மரணம், முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைத்தது, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து நாளை தேசிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza