லஞ்சம் வாங்கிய வழக்கில் மருமகன் கைதான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்ஸல் தனது பதவியைராஜினாமாச் செய்யவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: நிலக்கரி, 2 ஜி உள்ளிட்ட ஊழல்கள் எல்லாம் ஐ.மு அரசில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. புரட்சிகர காங்கிரஸ் ஊழல் காங்கிரஸாக மாறிவிட்டது. ஊழல் புரிவதும், குற்றவாளிகளை பாதுகாப்பதும் ஆகிய காரியங்களை மட்டுமே அரசுசெய்கிறது. ஊழல்களின் மூலம் நாட்டின் நம்பிக்கையை இழக்கச் செய்த அரசு ஆட்சியில் தொடர உரிமையில்லை.
கர்நாடகா தேர்தல் முடிவு கட்சியின் களங்கற்றமற்றத்தன்மையை நிரூபிக்கும் என்பது மக்களுக்கு எதிரான சவாலாகும். ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சொந்த கட்சியின் அமைச்சர்களை பாதுகாக்கும் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளில் குற்றம் சாட்டப்படுவோரை காட்டிக்கொடுக்கிறது. அ.ராசா, கலாநிதி மாறன் ஆகியோரின் அனுபவம் இதனை நிரூபிக்கிறது. பன்ஸலை ராஜினாமாச் செய்யவைத்து இத்தகைய குற்றச்சாட்டுக்களை களைய காங்கிரஸ் தயாராகவேண்டும். இவ்வாறு எ.ஸயீத் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment