ரமல்லா:பிறந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதன் துயர நிகழ்வுகளை நினைவுக் கூறும் விதமாக ஃபலஸ்தீன் மக்கள் நக்பா தினத்தின் 65-வது ஆண்டு நினைவுதினத்தை கடைப்பிடித்தனர்.
ராமல்லா, நப்லூஸ், துல்கரம், கல்கில்யா, பெத்லாஹ், ஜெரிகோ ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 65-வது நினைவு தினத்தை அடையாளப்படுத்தும் விதமாக 65 சைரன்கள் முழங்க பேரணி துவங்கியது. பேண்ட் வாத்தியத்துடன் கூடிய பேரணி மனரா சதுக்கத்தில் இருந்து துவங்கியதாக அல்ஜஸீரா கூறுகிறது.
1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய போரைத் தொடர்ந்து ஃபலஸ்தீனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.போருக்குப் பிறகு யூத ஆக்கிரமிப்பு அரசு உருவான பிறகு தற்போது வரை இத்தினத்தை நக்பா(துயர) தினமாக ஃபலஸ்தீன் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ராமல்லாவில் நடந்த நக்பா தின நிகழ்ச்சிக்கு ஃபலஸ்தீன் தேசிய ராணுவம் தலைமை வகித்தது.தேசிய ராணுவத்தின் பேண்ட் வாத்தியமும், 65 டார்ச்சுகளை பயன்படுத்தி நகரை வலம் வந்ததும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
இத்தினத்தையொட்டி ஃபலஸ்தீன் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியது:சுதந்திர நாடு என்ற ஃபலஸ்தீனின் உரிமைக்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன.சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களுடைய குடிமக்களை விடுதலைச் செய்து அமைதியான முயற்சிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் நடந்துகொள்ளவேண்டும் என்றார்
0 கருத்துரைகள்:
Post a Comment