Thursday, May 16, 2013

இந்திய முஸ்லிம்களின் வரலாறு சம்பந்தமான நூலகம் அமைக்க வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட்

மாவீரன் ஹைதர் அலி மற்றும் தீரன் திப்பு சுல்தானிற்கு மணிமண்டபம் தமிழக முதல்வரின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வாசித்த அறிக்கையில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பு செய்தார்.


இந்த அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. இதன் மூலம் சுதந்திரப் போரட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை எளிதாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். மேலும் இந்திய முஸ்லிம்களின் வரலாறு சம்பந்தமான நூலகம் ஒன்றையும் இதில் அமைக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டு கொள்கிறது.

இப்படிக்கு

A.S. இஸ்மாயில்

மாநில தலைவர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza